இன்றைய நாளின் ராசி பலன்கள்(23.03.2020)


மேஷம் : மனதில் நற்சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவி புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் வளர்ச்சி சீராகும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

ரிஷபம் : மனசாட்சிக்கு முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். நண்பர் முன்பு கேட்ட உதவியை வழங்குவீர்கள்.

மிதுனம் : எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கு பணவரவு கிடைக்கும். பிள்ளைகளை வழிநடத்துவதில் இதமான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது. வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: உங்களின் எதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தலாம். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். சொத்தின் பேரில் அதிக கடன் பெற வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

சிம்மம் : உயர்ந்த எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி : எளிய அணுகுமுறையால் பிறர் மனதில் நல்லவர் என்ற இடத்தை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.

துலாம்: சில நிகழ்வுகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்பட்டால் பணிகள் அனைத்தும் எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்றவும்.

விருச்சிகம்: வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பால் மட்டுமே பணவரவு சீராகும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது.

தனுசு: மனதில் இருந்த தயக்கம் விலகி தைரியம் உருவாகும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள்.

மகரம் : சிலரது பேச்சு மனதில் சங்கடத்தை உருவாக்கலாம். சொந்தப் பணிகளில் அதிக கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். கூடுதல் முயற்சியால் நிலுவைப் பணம் வசூலாகும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கும்பம் : உங்களை விமர்சிக்க சிலர் தயங்குவர். தொழில், வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றத்தை செய்வீர்கள். லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.

மீனம் : குடும்பத்தினரிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். செலவில் சிக்கனம் தேவை. வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
Previous Post Next Post
HostGator Web Hosting