மன்னாரில் 24 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னாரில் 24 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 120 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.Previous Post Next Post