யாத்திரை சென்ற 298 பேர் நாடு திரும்பினர் – கிளிநொச்சியில் தனிமைப்படுத்த நடவடிக்கை!

இந்தியாவிற்கு யாத்திரை சென்ற 298 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று(சனிக்கிழமை) இரவு டெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 196 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதனையடுத்து அனைவரும் நேரடியாக இரணைமடு கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் கிளிநொச்சி – இரணைமடு கொரோனா தடுப்பு முகாமிற்கு நேற்றிரவே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Previous Post Next Post
HostGator Web Hosting