மேற்கிந்திய தீவுகளுக்கு 308 ஓட்டங்களை நிர்ணயித்தது இலங்கை!!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை விளையாடி முடித்துள்ள இலங்கை அணி 308 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 2:30 மணியளவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரோ ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன், திசர பெரேரா 38 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக, அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும் ஜெசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதொடு, செல்டோன் கொட்ரெல், ரொஸ்ரன் ஷாஸ் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 308 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடவுள்ளது.Previous Post Next Post