ஊரடங்கு உத்தரவை மீறிய 338 போ் கைது- பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவிப்பு!!

ஊரடங்கு உத்தரவை மீறியதான குற்றச்சாட்டின் பேரில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 338 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊரங்கு உத்தரவு அமுலில் உள்ள காலப்பகுதியில் உறுதியான காரணம் சொல்லக்கூடிய அத்தியாவசிய, அவசர தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அவா் அறிவுறுத்தினார்.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை காலை 6 மணி முதல் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஊரடங்கு நீக்கப்படும் எனவும், அந்த மாவட்டங்களில் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
HostGator Web Hosting