41 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் 41 மற்றும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 45 வீதமானவர்கள் 41 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தொற்று நோய்கள் தொடர்பான விஞ்ஞானப் பிரிவு கூறியுள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்களில் 16.7 வீதமானவர்கள் 31 மற்றும் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள். தொற்றுக்கு உள்ளாகியுள்ள 65 பேரில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள்.

இதனடிப்படையில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 81 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் தொற்று நோய்கள் தொடர்பான விஞ்ஞானப் பிரிவு கூறியுள்ளது.
Previous Post Next Post