கொரோனா வைரஸ்; ஐரோப்பாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல் காரணமாக ஐரோப்பாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் சீனாவில் பெரும் தாக்கத்தை செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.

அந்த வகையில், ஐரோப்பாவில் கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலியில் 3,405 பேர், ஸ்பெயினில் 1,002 பேர், பிரான்சில் 372 பேர், பிரித்தானியாவில் 144 பேர், நெதர்லாந்தில் 76 பேர் என பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Previous Post Next Post