5,000 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இரத்து – பிரான்ஸ் அரசாங்கம் அதிரடி!!

நாட்டின் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5,000 க்கும் மேற்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது.

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த பாரிஸ் அரை மராத்தான் போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாரிஸின் வடக்கே மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியில், அனைத்து பொதுக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 100 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு இதுவரை அங்கு இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர்.

பாரிஸின் வடக்கே மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியில், அனைத்து பொதுக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

பிரான்சில் புதிய கொரோனா வைரஸின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 100 ஆக உயர்ந்தது. இரண்டு நோயாளிகள் இறந்துள்ளனர்.

உலகளவில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 85,500 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,900 க்கும் அத்திகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post