ஐரோப்பாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது!!

கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது என வேல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் முக்கிய நாடுகளில் 6 ஆயிரத்து 364 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 4 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர்.ஸ்பெயினில் ஆயிரத்து 326 பேர் உயிரிழந்துள்ளதுடன் இவர்களில் புதிதாக 233 பேர் அடங்குவர்.

ஜேர்மனியில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் இதுவரை 450 பேர் இறந்துள்ளனர்.சுவிஸர்லாந்தில் 58 பேர் இறந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 177 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்தில் 106 பேரும், பெல்ஜியத்தில் 67 பேரும், ஒஸ்ரியா மற்றும் நோர்வேயில் தலா 7 பேரும், சுவீடனின் 16 பேரும், டென்மார்கில்13 பேரும் போத்துக்கலில் 7 பேரும், அயர்லாந்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனை தவிர ஈரானில் ஆயிரத்து 556 பேரும், அமெரிக்காவில் 276 பேரும், தென் கொரியாவில் 102 பேரும், சீனாவில் 3 ஆயிரத்து 255 பேரும், மலேசியாவில் 4 பேரும், கனடாவில் 12 பேரும், அவுஸ்திரேலியாவில் 7 பேரும், ஜப்பானில் 35 பேரும், பிரேசிலில் 11 பேரும், துருக்கியில் 9 பேரும், லக்ஷ்சம்பேர்கில் 8 பேரும், இந்தோனியாவில் 38 பேரும், போலந்தில் 5 பேரும், ஈக்குவாடோரில் 7 பேரும், பிலிப்பைன்சில் 19 பேரும், சிங்கப்பூரில் 2 பேரும், ஈராக்கில் 17 பேரும், எகிப்தில் 8 பேரும், இந்தியாவில் 5 பேரும், ஹெங்கொங், பெரு, லெபனான் நாடுகளில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 11 ஆயிரத்து 838 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 லட்சத்து 84 ஆயிரத்து 516 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 93 ஆயிரத்து 566 பேர் வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என வேல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post