கொரோனா வைரஸால் பீகாரில் ஒருவர் உயிரிழப்பு; மொத்த உயிரிழப்பு 6 ஆக உயர்வு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 341 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கட்டாரில் இருந்து பீகார் திரும்பிய 38 வயதுடைய ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதுடன் இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post