கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு எந்தவிதமான கொரோனா தொற்றும் இல்லையென்பதை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

மன்னாரிலிருந்து 6 மாத குழந்தையொன்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தது.

எனினும் அந்த குழந்தைக்கு எந்தவிதமான கொரோனா தொற்றும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையானது இன்றைய தினம் வீடு செல்ல அனுமதிக்கப்படுமெனவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இக்குழந்தையானது மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதே தவிர அந்த குழந்தைக்கு கொரோனா தொடர்பான எந்தவித அறிகுறியும் இல்லை என வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் .
Previous Post Next Post
HostGator Web Hosting