கொரோனா வைரஸ் தொற்றால் அவுஸ்திரேலியாவில் 7வது நபர் மரணம்!

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், நியூ சவுத் வேல்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, இம்மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-யை தாண்டியுள்ளது.
Previous Post Next Post