கடலில் மிதந்த 76 கிலோ கேரள கஞ்சா..!

கைவிடப்பட்ட நிலையில் தலைமன்னார் - வடக்கு கடற்பகுதியில் மிதந்த 76 கிலோகிராம் கேரளா கஞ்சா கண்டறிப்பட்டுள்ளது.

தலைமன்னார் - வடக்கு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளில் 76 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதென கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான மிதந்து வந்த 16 பொதிகளை கைப்பற்றியுள்ள கடற்படையினர், அதில் ஈரப்பதமான 76 கிலோ கிராம் கேரளா கஞ்சா இருந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரோந்து நடவடிக்கைகளைக் கண்டு இதனை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிப்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post