பிரித்தானியாவில் வேலையிழப்பால் பாதிக்கப்படுவோருக்கு 80 வீத ஊதிய இழப்பீடு!

பிரித்தானியாவில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு எண்பது விழுக்காடு ஊதியத்தை அரசாங்கம் வழங்கும் என அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் தொழில் துறையும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தொழிலாளர்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரச சார்பில் எண்பது வீதம் ஊதியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி தொழிலாளர்களுக்கு மாதம் 2500 பவுண்ஸ் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Previous Post Next Post