பொதுத்தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பொதுத்தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுத்தேர்தலின்போது எவ்வித நிதி தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த தேர்தலுக்கு 6 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

பின்னர் அது வேட்பாளர்களை பொறுத்து அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையிலேயே அமைச்சரவை 8 பில்லியன் ரூபாவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Previous Post Next Post