ஊரடங்கு நேரத்தில் வாழைச்சேனை பகுதியில் 9 பேர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய கடந்த 24 மணித்தியாலங்களில் (இன்று சனிக்கிழமை மாலை வரை) ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் மது போதையில் பயணம் செய்த வேளையில் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்த்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் தனது பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதேவேளை நாடு பூராகவும் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பாட்ட 130க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post