ஏ 9 வீதியில் உள்ள மக்கள் அச்சப்பட தேவையில்லை

ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா - ஓமந்தை காவலரண் மூடப்பட்டுள்ளதால், அந்த காவலரண் ஊடாக அவசர நோயாளிகளை அழைத்துச் செல்லுதல், அத்தியவசிய பொருட்களை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெறும் என்பதால், ஏ 9 வீதியில் உள்ள மக்கள் அச்சப்பட தேவையில்லை என வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.எம்.பந்துசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அரசாங்க அதிபர் இதனை கூறியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டால், மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏ 9 வீதிக்கு வெளியில் வசிப்போர், வவுனியாவில் வசிப்போர் அவசர நோயாளிகளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பொலிஸாருக்கு அறிவித்து அதனை மேற்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.
Previous Post Next Post