வட்டுக்கோட்டை பிரதேசங்களுக்கான நிறைவான கிராமம் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!!!

வட்டுக்கோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமசேவகப் பிரிவுகளுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நேற்றைய தினம் (29) சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதனால் அடிக்கல் நாட்டு வைபவம் ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. .
இந்த அபிவிருத்தி நிகழ்சியில் சாவகச்சேரி பிரதேச செயலகர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்,கிராமசேவகர்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்இபயனாளிகள் என பலர்கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தி,கால்வாய்கள் அமைத்தல்,கிராமிய வாழ்வதார சந்தை, இவ்வாறான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படவுள்ளன.
Previous Post Next Post