இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுடன் காணொளி மாநாட்டை நடத்திய சீன நிபுணர்கள்!!

கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவின் நிபுணர்கள் இன்று இலங்கை உட்பட சில நாடுகளுடன் காணொளி மாநாடு ஒன்றை நடத்தினர்.

இந்த காணொளி மாநாட்டில் இலங்கையின் சார்பில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் தென்னாசிய நாடுகள் உட்பட்ட 18 நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சீன தூதரகம் கை கோர்ப்போம், ஆனால் கை குலுக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கைக்கான பதில் சீன தூதுவர் இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்து ஒரு லட்சம் முகக்கவசங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
Previous Post Next Post