கிரான்குளம் பிரதானவீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்படுகாயம்!!

செ.துஜியந்தன்
நேற்று இரவு மட்டக்களப்பு கிரான்குளம் பிரதான வீதியில் முருகன் கோவிலுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச்சம்பவத்தில் கிரான்குளம் கிராமத்தைச்சேர்ந்த என்.தனரெத்தினம் (33வயது) என்பவர் தலையில் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சிறியரக கெப் வாகனம் பிரதானவீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை பின்பக்கமாக மோதியுள்ளது. 

இதன்போது கெப்வாகனத்தின் முன் பகுதியில் துவிச்சக்கரவண்டியின் பின்பகுதி சிக்கிக்கொண்டதினால் வீதியில் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post Next Post