கிளிநொச்சி இளைஞன் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடா வருடம் நடாத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழா 31வது தடவையாக கடந்த (27) ஆரம்பமாகி அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகின்றது. 

இதில் நேற்று (29) நடைபெற்ற ஆண்களுக்கான இருபது வயதிற்கு மேற்பட்ட முப்பாய்தல் போட்டியில் கிளிநொச்சியை சேர்ந்த கேதீஸ்வரன் பவிந்திரன் எனும் இளைஞன் 13.69m தூரம் பாய்ந்து இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.


Previous Post Next Post