பிரதமருடனான கூட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க கூட்டமைப்பு தீர்மானம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முன் வைக்கப்படவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் அவசர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பிலும் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொறு மாவட்டங்களுக்கும் வழங்கப்படவுள்ள ஒரு மில்லியன் ரூபாய் நிதி போதுமானதாக இல்லை என்பதனை வலியுறுத்த உள்ளோம்.

மேலும் வடக்கில் கடற்தொழில் மேற்கொள்ளுவோர் முழுமையாக பாதி க்கப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ச்சியாக பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கூலித் தொழிலாளர்கள் போன்றே கடற்தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறித்த விடயங்கள் கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முன் வைக்கப்படவுள்ளது.

நாளாந்தம் தொழில் முயற்சியில் ஈடுபடுகின்ற மற்றும் விவசாயிகளுக்கும் உதவித் திட்டங்களை மேற்கொள்ள குறித்த கூட்டத்தில் பரிந்துரைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் முன்வைக்கப்படவுள்ள தோடு அனுராதபுரத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்களின் போது பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த கோரியும் கருத்துக்கள் முன் வைக்கப்படவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post