அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபா

Image result for sri lanka currency lowஅமெரிக்க டொருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 189.87 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாயின் வீழ்ச்சி பாரிய வேகத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post