இரத்தத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்

நாட்டினுள் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இரத்தத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷமன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (19) முதல் இரத்த தானம் செய்யும் நபர்களுக்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களுக்கு வழங்கப்படும் நேரத்தின் அடிப்படையில் இரத்த தானம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


0115332153
Previous Post Next Post