கிண்ணியாவில் நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் தமது நாளாந்த தொழிலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பது சம்மந்தமான விசேட கலந்துரையாடல் இன்று காலை கிண்ணியா பிரதேச செயலாளருடன் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் அவர்களும் கலந்துகொண்டதுடன் இது போன்று மூதூர், திருகோணமலை பட்டினமும் சூழலும், தம்பலகாமம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலும் நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பது சம்மந்தமாக குறிப்பிட்ட பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடப்பட்டது.Previous Post Next Post
HostGator Web Hosting