முன்னாள் விமானப்படை தளபதி மேல் மாகாண ஆளுநராக நியமிப்பு!!

மேல் மாகாண புதிய ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று முற்பகல் இந்த நியமனத்தை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருத்துவர் சீதா அரம்பேபொல ஆளுநர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ரொஷான் குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை மேல் மாகாண ஆளுநர் பொறுப்பை ஏற்குமாறு விடுத்த கோரிக்கையை பிரபல நடிகர் ரவிந்திர ரந்தெனிய மறுத்துள்ளார்.

இப்படியான பொறுப்பை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரந்தெனிய கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த பதவியை ஏற்க முடியாது எனவும் இது குறித்து தாம் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த நாட்டை உருவாக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாகவும் ரவிந்திர ரந்தெனி மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post