அரசாங்கத்தின் அறிவிப்புகளை பின்பற்றுங்கள்; வீண் அச்சம் வேண்டாம் - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடர்ந்தும் பல உயிர்கள் பலியெடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.

என்ற போதும் தமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெருமளவான புரளிகள் கிளப்பப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள், மூலிகைகள் என பல வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான தகவல்களை அரசாங்கம் வெளியிட்டு வருகிறது.

எனவே வதந்திகளை நம்பி வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
Previous Post Next Post
HostGator Web Hosting