நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலானது- மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் வீடுகளை விட்டு வௌியேறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், நோய் நிவாரணக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் அத்தியாவசியத் தேவை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் தங்களின் விமானப் பயணச் சீட்டை, ஊரடங்குச் சட்டத்தின் போது அனுமதிச் சீட்டாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Image result for sl policePrevious Post Next Post