கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடை!!

அம்பாறை வைத்தியசாலையில் கொரோனா கட்டுப்பாட்டு பிரிவினால் வைத்தியசாலை ஊழியர்களுக்கு அவசியமான ஆடைகளை குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உக்கும் பொலித்தீன் பயன்படுத்தி இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடையை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும் என அம்பாறை வைத்தியசாலையின் நுண்ணுயிர் பிரிவு வைத்தியர் தர்ஷன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த ஆடையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆடையை அம்பாறை வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்க கூடிய ஆரம்ப சிகிச்சை வழங்குவதற்காக அம்பாறை வைத்தியசாலையில் பல இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Previous Post Next Post