கல்முனை வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பான சுவரொட்டிகள் வழங்கிவைப்பு!!

செ.துஜியந்தன்
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒன்றிணைவோம் என்ப தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகளை மக்களின் பார்வைக்காக கிராமசேவகர்கள் ஊடாக காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்தவ மேம்பாட்டு நிலையம் ஆகியவற்றினால் அச்சிடப்பட்டுள்ள சுவரொட்டிகளே மக்களின் பார்வைக்காக கிராமங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இன்று பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அமலதாஸ் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சுவரொட்டிகளை வழங்கிவைத்தார். அத்துடன் பிரதேச இளைஞர்களும் தங்களால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை பிரதேச செயலாளருக்கு வழங்கி வைத்தனர்.


Previous Post Next Post