பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் விபத்துச் சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு!!!


பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Previous Post Next Post