டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபா!

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 190 ரூபாவை கடந்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 190.61 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் உக்கிரம் தாண்டவம் ஆடுகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள. இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
HostGator Web Hosting