மெட்ரோ ரயில் சேவைகள் இரத்து!

Image result for metro train delhiதலைநகர் டெல்லி மற்றும் சென்னையில் நாளை மறுதினம் மெட்ரோ ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதால் அனைத்து விமானப் பயணிகளும் முழுமையாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மக்கள் தங்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் வரும் 22ஆம் திகதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லி மற்றும் சென்னையில் வரும் 22ஆம் திகதி மெட்ரோ ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post