கொழும்பு கிழக்கு வைத்தியசாலையும் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றம்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலையும் மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கான ஒழுங்குகள் யாவும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் அங்கொடையில் உள்ள தேசிய தொற்று எதிர்ப்பு வைத்தியசாலையில் மாத்திரமே கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் 100 சாதாரண கட்டில்களும், 30 விசேட கட்டில்களும் வழங்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post