இலங்கையிடம் உலக உணவுத்திட்டம் விடுத்துள்ள கோரிக்கை

Image result for united nations world food programme
கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பு என்பவற்றின் அடிப்படையில் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பில் வானிலை மாற்றங்களின்போது சவால்கள் ஏற்படக்கூடும்.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசேட கவனத்தை செலுத்த வேண்டும் என்று உலக உணவுத்திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக உணவுத்திட்டத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்போக அறுவடையானது 2020 செப்டம்பர் வரையிலான காலப்பகுதிக்கு போதுமானதாக இருக்கும்.

ஏற்கனவே வடமத்திய, கிழக்கு மற்றும் வடக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளநிலைமை காரணமாக 57ஆயிரம் மெற்றிக்தொன் உற்பத்தி குறைவு ஏற்பட்டபோதும் அது உணவுப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உலக உணவு பாதுகாப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் மே மாதத்தில் பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படும் மழை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும்.

அந்த சூழ்நிலையின்போது சுத்தம் மற்றும் சுகாதார குறைபாடு என்பன கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

எனவே இதனை சமாளிக்கும் இலங்கையின் அதிகாரிகள் திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்றும் உலக உணவுத்திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.
Previous Post Next Post