கொரோனா அச்சுறுத்தல் – பிரதான கடற்கரையை மூடியது அவுஸ்ரேலியா

கொரோனா தொடர்பான விதிமுறைகளை சுற்றுலா பயணிகள் மீறி வருவதை தொடர்ந்து, அவுஸ்ரேலியாவின் பொண்டி கடற்கரை (Bondi Beach) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகரில் அமைந்துள்ள குறித்த கடற்கரை இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக மூடப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகள் அவதிப்பட்டு வரும் நிலையில், குறித்த கடற்கரையில் கடந்து சில நாட்களாக மக்கள் கூட்டம் திரண்டது.
இதேவேளை குறித்த கடற்கரையில் திரண்ட மக்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என அவதானிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜெர்க் ஹாண்ட் அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 874 ஆக அதிகரித்துள்ளதுடன், இறப்பு எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கடற்கரையில், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் கூடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், நேற்று (வெள்ளிக்கழமை) சமூகமயமாதல் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post