அனுராதபுரத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் யாழுக்கு மாற்றம் !

Image result for அனுராதபுரத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகள்அனுராதபுரம் சிறையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 10 பேர் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் தமிழ் கைதிகளின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனுராதபுரம் சிறையில் இருந்த பதினொரு அரசியல் கைதிகளில் பத்துப் பேர் மாற்றப்பட்டுள்ளதாகவும் எஞ்சியுள்ள ஒருவரையும் யாழுக்கு மாற்ற நடவடிக்கைகள் பேச்சு நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
Previous Post Next Post