இன்று கல்முனை நகரில் அதிக சனநெரிசல்

செ.துஜியந்தன்

கல்முனை நகர் இன்று சனநெரிசல் மிகுந்து காணப்பட்டது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின் அதிகளவிலான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் முண்டியத்ததைத் காணக்கூடியதாக இருந்தது.

கல்முனை போக்குவரத்துப் பொலிஸார் சனநெரிசலையும் வாகனப்போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கல்முனைப்பிராந்திய சுகாதாரப்பிரிவினர் பொதுமக்களை கொரோனா தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இன்றைய சனநெரிசல் காரணமாக கல்முனை நகரில் போக்குவரத்தச் செய்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

Previous Post Next Post