வெளிநாட்டவர்கள் இன்று முதல் அவுஸ்ரேலியாவிற்குள் நுழையத்தடை!அவுஸ்ரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்ரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பெருமளவு பாதிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டனவாக காணப்படுகின்றன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளன. இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கவேண்டும் எனவும் பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post