அதி விஷேட அறிவித்தல்!!

தயவு செய்து பாரதூரத்தை விளங்கிக் கொள்ளவும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில்.....

1, உங்கள் வீடு அல்லாத வேறு வீடுகளில் இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

2, 45000 மேற்பட்ட பொலிஸார் நாடு பூராவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3, ஊரடங்கு சட்ட விதிகளை மீறுவோருக்கு எந்த விதமான அனுதாபமும் காட்டப்படமாட்டாது.

4, வாகனங்கள் பொலிஸ் வசப்படுத்தப்படுவதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

5, வாகன உரிமையாளருக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

6, இது தேர்தல் காலங்களில் போடப்படும் ஊர் அடங்கு சட்டம் போன்றதல்ல என்பதை புரிந்து கொள்ளவும் .

7, இந்த ஊரடங்கு சட்டத்தின் நோக்கம் கொவிட்-19 நோய் பரவுவதை தடுத்து நிறுத்தி நாட்டினை பாதுகாக்க எடுக்கப்படும் அதி விஷேட ஊரடங்கு சட்டம் என்பதை புரிந்து தலைகால் விளங்காமல் நடந்து கொள்ளாமல், சட்டத்தை மதித்து நடக்கும் அறிவுள்ள மனிதர்களாக மரியாதை உள்ள சமூகமாக நடந்து கொள்வோம் 

Sri Lanka Police
Previous Post Next Post