மக்களுக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும்-அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்து!!!


இது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் புதல்வியும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போதைய சூழ்நிலையில் எமது மலையக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போதிய பணம் இல்லாததால் பெரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். பொருட்கள் சரியான முறையில் கிடைப்பதில்லை. வேலைக்கு செல்வதற்கு முக கவசங்களோ பாதுகாப்பு உபகரணங்களோ பலருக்கு வழங்கப்படவில்லை. இப்படியே காலம் கடத்தப்பட்டால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

மலையக தொழிற்சங்கங்கள் இந்த தொழிலாளர்களுக்கான கஷ்டகாலத்தில் உதவ முன்வராவிட்டால் தொழிற்சங்கங்கள் நடாத்தப்படுவதற்கு அர்த்தம் எதுவும் இல்லை. சந்தாப்பணம் அறவிடுவதும் காரியாலயங்கள் நடத்துவதும் தொழிலாளர்களுக்காக இருக்க வேண்டுமே தவிர சுய தேவைகளுக்காக இருக்கக்கூடாது.

இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து எம் தொழிலாளர்களுக்கும் தின சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கு வேதனத்துடனான விடுமுறையை வழங்க முன்வரவேண்டும். அரசாங்கம் எம் மக்களின் சுகாதார ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post
HostGator Web Hosting