யாழ் சங்கரத்தை பத்திரகாளி ஆலய மகோற்சவம் தொடர்பில் விசேட அறிவித்தல்.


சங்கரத்தை பிட்டியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த நிலையில், சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியை அடுத்து பிற்போடப்பட்டுள்ளது என ஆலய அறங்காவலர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக அறங்காவலர்கள் செய்திக்குறிப்பொன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த செய்திக்குறிப்பில்,

சங்கரத்தை – பிட்டியம்பதி பத்திரகாளி அம்பாளுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறவிருந்த வருடாந்த மகோற்சவ பெருவிழா சர்வதேச ரீதியிலும், எமது நாட்டிலும், எமது சூழலிலும் ஏற்பட்டுள்ள சுகாதார ரீதியான அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு அடியார்களாலும் சமய நிறுவனங்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க மீள் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றது.

திருவருள் கைகூடும் பிறிதொரு தினம் திருவிழாவை நடத்துவதற்காக தீர்மானிக்கப்படும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post