கொரோனா அச்சம்: வெளிநாட்டினர் நுழைய தடை விதித்த அவுஸ்திரேலியா!தீவிரமடைந்து வரும் கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டினர் நுழைவதற்கு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் வெடிப்பை தடுக்கும் முயற்சியாக, வெளிநாட்டினர் நுழைவதற்கு தடை விதிப்பதாக அறிவித்த சமீபத்திய நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாகும். இதே நடவடிக்கையை அண்டை நாடான நியூஸிலாந்தும் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமையன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டார். எல்லைகளை மூடுவதற்கு முன்னதாக நாட்டில் நுழைபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி. அவுஸ்திரேலியாவில் 636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ள நியூசிலாந்து, முக்கிய மருத்துவ நிபுணர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதாக கூறியுள்ளது.
Previous Post Next Post