இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு!

இந்தியாவுக்கு யாத்திரை சென்றநிலையில் இலங்கை திரும்பியுள்ள 113 பேரும் அநுராதபுரத்தில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மையத்துக்கு அனுப்பபட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய நடவடிக்கை மையத்தின் தகவல்படி 30 வெளிநாட்டவர்கள் உட்பட்ட 2738 பேர் 17 தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மையங்களில் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வன்னியில் அமைக்கப்பட்ட முதலாவது கண்காணிப்பு மையத்தில் வெளிநாடுகளில இருந்த வந்த 206 பேர் கண்காணிப்படுகின்றனர்

இதனையடுத்து பலாலி, இரணைமடு மற்றும் முல்லைத்தீவில் மேலும் 3 கண்காணிப்பு மையங்களை வான்படையினர் அமைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையில் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 72 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post