பொருட்கள் இன்றி தவிக்கும் கொழும்பு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களுக்கான முக்கிய தகவல்!

கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புள்ள மாவட்டங்களாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகியன பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த மூன்று மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

எனினும் இந்தக் காலப்பகுதியில் மக்களின் நன்மை கருதி பொருட்களை விநியோகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாளையதினம் முதல் நடமாடும் விற்பனை கூடங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யப்படவுள்ளது. 

வாகனங்கள் மூலம் பொருட்களை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், முச்சக்கரவண்டி உள்ளிட்ட சில வாகனங்களுக்கு விசேட அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் மக்கள் வீட்டிலிருந்தவாறே தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சேவையின் மூலம் சமையல் அத்தியாவசிய பொருட்கள், எரிவாயு, உணவுப் பொருட்கள் என்பன விற்பனை செய்யப்படவுள்ளன.
Previous Post Next Post