குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விட்ட போது மின் கம்பத்தில் மோதி விபத்து; இளைஞன் படுகாயம்!!

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இளைஞன் ஒருவன் வீதியை திடீரென்று குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விட்ட போது சைக்கிள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வீதியில் வைத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தலைக்கவசம் அணிந்திருந்ததோடு கையில் மேலதிக தலைக்கவசம் ஒன்றினை கொழுவி வந்தால் வீதியை குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விடும் போது மோட்டார் சைக்கிள் திசைமாறி மின் கம்பத்தில் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post