மூதூரில் கொரோனா நோயாளர் இணங்காணப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது

மூதூரில் கொரோனா நோய் தொற்றாளர் ஒருவர் இணங்காணப்பட்டுள்ளதாக இணையங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி யாக்கூப் ஜெஸ்மி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூதூரில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

அதேவேளை இத்தாலி, கட்டார், சவுதி, பாக்கிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்த 53 பேரும் புத்தளம் பகுதியிலிருந்து மூதூருக்கு வருகை தந்த 21 பேரும் தனிமைப்படுத்தப்பபட்டு மூதூர் சுகாதார பணிமனையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு மூதூரில் கொரோனா நோயாளர் இணங்காணப்பட்டதாக வெளியான செய்தியானது உண்மையல்ல. எனவே பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம்.

மேலும் பொதுமக்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சுகாதார பழக்கவழக்கங்களை மேற்கொண்டு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post