ஊடரங்குச் சட்ட நடைமுறையால் வெறிச்சோடியது யாழ்.மாநகரம்

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணி வரை நாடுமுழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர் பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

சில கடைகள் மாலை 6 மணிக்கு பின்பும் திறக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸார் அவற்றை பூட்டுமாறு உத்தரவிட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களை வீடுகளில் முடங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை 6 மணிவரையான 60 மணித்தியாலங்கள் நாடுமுழுவதும் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


Previous Post Next Post