கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்முனை பொதுச்சந்தை இயங்கவில்லை!!

செ.துஜியந்தன்
கொரோன வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவும் பொதுமக்களின் சுகாதரபாதுகாப்பை கருதியும் இன்று தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கல்முனை பொதுச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் கல்முனை பொதுச்சந்தை இயங்கவில்லை.

நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் கல்முனை மாநகரசபை முதல்வர், ஆணையாளர், பிரதேசசெயலாளர்கள், சுகாதாரவைத்திய அதிகாரிகள், பொலிஸ்பொறுப்பதிகாரி, முப்படைகளின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தீர்மானத்திற்கமையவே கல்முனை நகரின் பிரதான பொதுச்சந்தை உட்பட ஏனைய சந்தைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய இன்று கல்முனை நகர் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. இங்குள்ள பிராதான வீதிகளின் ஓரத்தில் சிறு வியாபாரிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதையும் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே பாதுகாப்பு கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் நேற்று முதல் ஓரிடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post