நாடாளுமன்றத்தை கொரோனா தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்த வேண்டும்!!

நாடாளுமன்ற கட்டிட தொகுதியை கொரோனா தனிமைப்பத்தல் மத்திய நிலையமாக மாற்ற வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இங்கிரியவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை. நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் இயங்காத நிலையில் அரசாங்கம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை ஒரு நாள் கூட்ட 70 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. அந்த பணத்தை விரயமாக்காது நாடாளுமன்றத்தை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்ற வேண்டும்.

இங்கிரியவில் உள்ள எனது வீட்டை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்ற வழங்க விரும்புகிறேன். அதற்காக எந்த கட்டணத்தையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post